குருதிநீருக்குள்ளே: கடவுளர், மரபணுக்கள் மற்றும் ஊழ்வினைப்பயன்

28 Dec


குருதிநீருக்குள்ளே: கடவுளர், மரபணுக்கள் மற்றும் ஊழ்வினைப்பயன்

(ஸ்டீவ் ஜோன்ஸ் 1996 ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீட்டாளர்கள், லண்டன்)

தமிழாக்கம்: முனைவர் பாலசுப்பிரமணியன், பயிர் உயிரிய நுண்தொழில்நுட்பப் பேராசிரியர்,
தமிழ் நாடு வேளாண்பல்கலைக்கழகம், கோவை 641003 balasubrap@hotmail.com

‘குருதி என்பது மிகச்சிறப்பான ஒரு நீர்ப்பொருள்.’ மனித சமுதாயத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட வலிமை அதற்கு உண்டு. கெத்தே எனும் புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் கற்பனையில் உதித்த ஃபாஸ்ட் எனும் மந்திரவாதி தன்னுடைய ஆவியை சாத்தானிடம் விற்க துணிகிறான். அப்போது சாத்தான் கேட்டதாம்: “இதற்கான ஒப்பந்தத்தில் உன் குருதியால் கையொப்பம் இட்டுத்தா. அப்படித் தந்தால் நீ கேட்ட 24 ஆண்டு அதிக ஆயுளும், அறிவும் செல்வமும் தருகிறேன்”

குருதிநீர் காலகாலமாக மதத்துடன் தொடர்புப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மதவாதப் பார்வையை சிறிது விலக்கி தற்காலப் பார்வையில் குருதிநீர் என்பதற்கு பதிலாக மரபணுக்கள் என்றும் கொள்ளலாம். இன்றும் மியஜிமா எனும் ஜப்பானியத் தீவில் அமைந்திருக்கும் ஒரு பௌத்த கோயிலின் வெளியே ஒரு சிவப்பு நிறச் சதுரப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நான்கு பக்கங்களில் அமைக்கப்பட்டிருக்கும் A, B, AB மற்றும் O எனும் குறியிட்ட சாளரத்துளைகளில் அந்தந்த குருதிப்பிரிவினைச் சேர்ந்த ஜப்பானியக் காதலர்கள் தங்களின் கையை விட்டு அவரவர்களின் குணநலன்கள் குறித்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளார்கள். திருமணம் புரிந்து கொள்ள முடிவு எடுக்குமுன் தவறாமல் நடக்கும் ஒரு நடைமுறை இது (படம் 1).

மதக்கோட்பாட்டின் அடிப்படையில் குருதிநீர் எப்படியெல்லாம் எடுத்தாளப் பட்டிருக்கிறது என்பதைச் சில எடுத்துக்காட்டுகளுடன் இப்போது பார்க்கலாம். இன்றும் மாதவிடாய் காலங்களில் சில பழமைவாதக் குடும்பங்களில் மகளிருக்குக் கட்டுப்பாடுகள் உண்டு என்பதை நம்மில் எல்லோரும் அறிவோம். யூதர்களிடையேயும், முஸ்லிம்களிடையேயும் சிறுவர்களின் முன்தோலகற்றும் நிகழ்வு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது என்றும் நம்மில் பலருக்குத் தெரியும். கத்தோலிக்க மதத்தில் புனித காதரீன் தான் இயேசுவின் குருதியினை முகர்ந்து பார்த்த அனுபவத்தினை இவ்வாறு கூறுகிறாள்: “செம்மறி ஆட்டுக்குட்டியின் குருதி குறித்து இயேசுவுக்கு இப்போது நினைவூட்டுகிறேன்; அதற்கு மறுமொழியாக இயேசு என்னிடம் இயேசு-காதரீன், இயேசு-காதரீன் எனத் திரும்பத்திரும்பச் சொன்னார். அப்போது என் ஆவி இயேசுவின் குருதிக்குள் அமைதியானது”

மதவாதிகள் மற்றும் கவிஞர்களைப் போலல்லாமல் அறிவியலார் குருதியை நோக்கிய விதமே சிறப்பானது. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ஐந்தரை லிட்டர் குருதி ஓடுகிறது. அதன் சரிபாதி செங்குருதியணுக்களால் ஆனது. (படம் 2). ஒரு மனிதனின் செங்குருதியணுக்களைப் சமதளத்தில் பரப்பிவைத்தால் 3600 சதுரமீட்டர் பரப்பு இருக்கும். செங்குருதியணுக்களில் உட்கருவும் இல்லை; மரபணு வேதிப்பொருளான டி. என். ஏ. (DNA) எனப்படும் உட்கருஅமிலமும் இல்லை. அதில் உள்ளதெல்லாம் ஹீமோகுளோபின் எனும் புரதம்தான். அப்புரதம் உயிர்வளியை (oxygen) உறிஞ்சிக் கொள்ளும் திறனும் கரியமிலவளியை (carbon dioxide) வெளியே விட்டுவிடும் திறனும் கொண்டது. குருதியே நம் உடலின் போர்வீரன்.

எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சிறிய வெட்டுக்காயம் உடனடியாக குருதி உறைதலின் மூலம் குணமாக்கப்படுகின்றது (படம் 3).ஆனால் ஒருசில மனிதர்களைப் பீடிக்கும் ஹீமோஃபீலியா (hemophilia) எனும் குருதி உறையாக்குறைபாடு மரபணு சடுதிமாற்றத்தினால் (mutation) உண்டாவதாகும். இந்நோய் வழுக்கை விழுவதைப் போலவே பெண்களைத் தாக்குவதில்லை. ஆண்களை மட்டுமே இந்நோய் குறிவைத்துத் தாக்குகிறது. பெண்கள் இந்த குறைபாட்டைச் சுமந்து செல்லும் காரணிகள் (symptomless carriers), அவ்வளவே. அதனால் மகனைத் தாக்கும் இந்நோய் அவனைப் பெற்ற தாயைத் தாக்குவதில்லை.

உட்கரு இல்லாவிட்டாலும், குருதிநீரில் குருதிப்பிரிவு எதிர்ப்பணுக்கள் (blood group antigens) உள்ளன. அப்பிரிவுகளுக்குள்ளே சில வேறுபாடுகள் உள்ளதால் நாம் அவற்றை A, B, AB மற்றும் O எனப் பிரிக்கிறோம். ஏதேனும் இரண்டு குருதிப்பிரிவுகளைச் சேர்ந்த குருதிநீர்கள் ஒரு மனிதன் உடலில் எதிர்பாரா விதமாக ஒன்றாகக் கலந்து விட்டால் அம்மனிதன் உயிரிழக்க நேரிடும்; அவ்வாறு நேரும்போது அவ்விரண்டு குருதிப்பிரிவுகளை ஒவ்வாப்பிரிவுகள் (incompatible groups) என்றழைக்கின்றோம். அவ்வண்ணம் உயிரிழப்பு நிகழாவிட்டால் அந்த பிரிவுகளை தகும்பிரிவுகள் (compatible groups) என அழைக்கின்றோம் (படம் 4).

மனிதன் தொன்றுதொட்டே தன்னை அறியாமலேயே குருதி பற்றிய மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கணிதமேதை பித்தகரஸ் முதல் டார்வின் வரை அவர்களின் மரபியல் சார்ந்த கூற்றுக்களை அறிவியல் உலகம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டதேயில்லை என்பது வரலாறு. டார்வினின் காது கேளாமை குறித்த மரபணு கோட்பாடுகளில் தெள்ளிய சிந்தனை குறைவாகவே காணப்பட்டது என்பது உண்மை. டார்வின் குருதி எனப்படுவது பெற்றோர்களின் உயிர்நீர்ப்பொருள்கள் கலப்பதால் உருவாவது என நினைத்தார். ஏனெனில் டார்வினின் காலத்தில் மரபணு (gene) குறித்த வரையறுக்கப்பட்ட உண்மை உருவாகவில்லை; அவ்வறிவு பின்னாளில்தான் நமக்குச் செம்மைசெய்யப் பெற்று கிடைத்தது..

சோவியத்து ரஷ்யாவில் மரபியல் ஆய்வு என்பது மனிதன், பழ ஈ (Drosophila) மற்றும் கோதுமை ஆகிய மூன்று உயிரினங்கள் தவிர மற்றவைகளில் சர்வாதிகாரி ஸ்டாலினின் கம்யூனிச சித்தாந்தத்தால் ஊக்குவிக்கப் படவில்லை என்பது அப்பட்டமான உண்மை. அப்போது சோவியத்து ரஷ்யாவில் மார்க்சியச் சிந்தனையின் அடிப்படையில் மனிதனை பொருளதார அளவில் முன்னேற்றுவதன் மூலம்கூட அவனை மரபியல் முன்னேற்றம் அடைய வைக்கமுடியும் என்று அனைவரும் நம்பும்படியாக எண்ணவோட்டங்கள் இருந்தன. மனிதனின் அறிவியல் பெயரான Homo sapiens (அறிவுடை மனிதன்) என்பதை மாற்றி கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட சோவியத்து ரஷ்ய மக்களுக்கு மட்டும் Homo sovieticus (சோவியத்து மனிதன்) என்று பெயரிட முயற்சிகள் கம்யூனிச உலகத்தில் நடந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவ்வகையான தனிமனிதச் சித்தாந்தப் பேராசை வேளாண்மையில் பெரும் பங்கு வகிக்கும் பயிர் மரபியலையும் விட்டுவைக்கவில்லை. ‘சமூக முன்னேற்றம் தழுவிய’ மரபியல் ஆய்வு பனிக்காலத்தில் பனியைத்தாங்கி வளரும் கோதுமைப் பயிரில் முனைவர் லைசென்கொ தலைமையில் நடைபெற்றது. விளைவு? சைபீரியாவில் அப்போது ஏற்பட்ட கொடும்பனியில் உண்ண உணவில்லாமல் ஏராளமான சைபீரிய மக்கள் செத்து மடிந்தனர். அப்போதைய சோவியத்துப் பிரதமர் குரூஸ்சேவ் முனைவர் லைசென்கொவைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “இனி உங்கள் மரபியல் ஆராய்ச்சி சைபீரியாவில் வேண்டாம்; சந்திர மண்டலத்தில் தொடரட்டும்” (முனைவர் லைசென்கொவின் மற்ற மரபியல் ஆய்வு முடிவுகள், பெட்டிச் செய்தி 1).

Box1

Box2

இந்நிகழ்வுக்குப்பின் 1970-இல் தான் சோவியத்து ரஷ்யா உலகம்தழுவிய மரபியல் ஆய்வில் மீண்டும் இணைந்தது.
—————————–
படம் 1: ஜப்பானிய திருமண நிமித்திகக் கருவி. A, B என்பன குருதிப்பிரிவினைக் குறிக்கும். japanese blood
படம் 2: குருதிநீர் நுண்ணோக்கி வழியே: இரண்டு செங்குருதியணுக்களும் ஒரு சில வெண்குருதியணுக்களும்Blood white cells
படம் 3: குருதி உறைதலின் போது என்ன நடக்கிறது? ஃபைப்ரின் எனப்படும் கயிறு போன்ற பொருளின் நடுவே செங்குருதியணுக்கள். காயம் ஆறும் நிகழ்வு நடந்தேறுகிறது. Blood clotting
படம் 4: குருதிநீர் ஒவ்வாமை கண்டுபிடிப்பது எப்படி?: இரண்டு ஒவ்வா குருதிநீர்ப்பிரிவுகள் சேரும்போது (இடம்) தகும் குருதிநீர்ப்பிரிவுகள்சேர்ந்த நிலை (வலம்). வலப்புறம் உள்ள கலப்புக் குருதிநீர் செலுத்தப்பெறும் நோயாளிக்கு ஆபத்து விளையாது.Typing
படம் 5: மரபியல் விதிகள் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு கட்டுப்படா: டாக்டர் லைசென்கோ, சைபீரிய உணவுப்பஞ்சத்தின் தந்தை. Lysenko
படம் 6: பால்வினை நோய்க்காரணி. விதைக்கொட்டையை பீடித்த டிரிபொநீமா பால்லிடம் (Treponema pallidum) எனும் பாக்டீரியம் Syphilis
படம் 7: நவீன மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் (Fr. Gregor Mendel). மதப் போதகரானாலும் அறிவியல் காட்டிய வழியில் சென்றதால் ஒல்காப்புகழ் பெற்றவர். Mendel

பெட்டிச் செய்தி 1. முனைவர் லைசென்கொவின் மற்ற மரபியல் ஆய்வு முடிவுகள்

1. சிட்டுக்குருவிகள் அதிகமாக கருப்புக் கம்பளிப்பூச்சிகளைத் தின்பதால் அவை இடும் முட்டைகளில் இருந்து கரிய குயில்குஞ்சுகள் வெளிவரும்.
2. Gout எனும் உப்பு நோய் அதிக மது அருந்துவோர்களின் மூட்டுகளைத்தாக்கும்.
3. மதுவிரும்பிகளின் குழந்தைகள் அனைவரும் முட்டாள்களாகவே பிறப்பார்கள்.
4. ஒருமுறை செல்வம் சேர்த்துவிட்ட குடும்பம் பலதலைமுறைகளுக்கு பணக்காரக் குடும்பமாகவே இருக்கும்.
முனைவர் லைசென்கொவின் சோவியத்து சமூகம் சார்ந்த இவ்வளவு எண்ணவோட்டங்களுக்கும் நவீன மரபியலில் இடமில்லை. ஆனால் அக்காலத்து சோவியத்து ரஷ்யாவில் லைசென்கொவின் மரபியல் சித்தாந்தத்தை மறுத்துப் பேசியவர்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டனர். ஆனால், லைசென்கொவின் மரபியல் சித்தாந்ததம் ஐரோப்பாவில் செவிவழி பரவியதால் மிகச் சிறப்பான நிகழ்வு ஒன்று அமைதியாக நடந்தது. ஐரோப்பாவில் அவ்வமயம் Great Pox என்றழைக்கப் பெற்ற பால்வினை நோய் (syphilis) வேகமாகப் பரவி வந்தது. எந்த ஒரு ஐரோப்பிய நாடும் அந்நோய் தங்கள் நாட்டில் இருந்துதான் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியது என்ற உண்மையை மறைக்க லைசென்கொவின் மரபியல் சித்தாந்தத்தை உதவிக்கு வைத்துக்கொண்டனர். (பெட்டிச் செய்தி 2)

பெட்டிச் செய்தி 2. Syphilis எனப்படும் பால்வினை நோய் பற்றிய ஐரோப்பாவின் அறியாமை

1. ஃபிரெஞ்ச்சுக்காரர்கள் அந்த நோய்க்கு ‘இத்தாலிய நோய்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
2. இத்தலியர் உடனே அந்நோய்க்கு ‘ஃபிரெஞ்ச்சு நோய்’ பெயரிட்டு பதிலடி கொடுத்தனர்.
3. இந்த அறியாமைக்கும் குழப்பத்துக்கும் காரணம் அந்தக்கால ஐரோப்பியர்கள் நோய்த்தொற்றுக்கும் (infection) பரம்பரை நோய்க்குமான (inherited disease) வேறுபாட்டினை அறியவில்லை அல்லது அறிய விரும்பவில்லை.
4. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், பத்தில் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் இந்த கொடும்நோய்க்கு இரையாகினான். ஆனால் பழி முழுவதும் மனைவிமார்கள் மீதே சுமத்தப்பட்டது. 1864-இல் அதற்கான தனிச் சட்டமும் இயற்றப் பெற்று பெண்கள் சிறைகளில் வாடினர்.
5. இக்குழப்பம் அமெரிக்காவிலும் பரவியது. இருபதாயிரம் அமெரிக்கப் பெண்மணிகள் இந்நோய்த்தொற்றுள்ளவர்களாக அறிவிக்கப்பெற்றனர். மேலும் அமெரிக்கப் படைவீர்ர்களுக்கு இதுபற்றி எச்சரிக்கைகளும் விடுக்கப் பட்டது அல்லாமல் புதியதாக ஒரு ‘பழமொழி’யும் தோன்றியது: அமெரிக்க வீர்ர்கள் அவர்களின் எதிரிகளான ஜெர்மானியர்களின் குண்டுக்கு இரையாவதுதான் மிகுந்த சிறப்புடையது; பரத்தையரிடம் இருந்து வாங்கிய பால்வினைநோயினால் இறப்பதால் அல்ல (A German bullet is cleaner than a whore).
6. பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் தந்தை ரன்டால்ஃப் சர்ச்சில் 1873-இல் இந்நோய்த்தொற்றுக்குள்ளானார் (பிரதமர் இதற்கு முன்பாகவே பிறந்து விட்டதால் இந்நோய்த்தொற்றிலிருந்து மயிரிழையில் தப்பினார். ஆனால் அவருடைய தாயார் தப்பமுடியவில்லை). பாராளுமன்ற உறுப்பினரான ரன்டால்ஃப் இந்நோய்த்தொற்றுக் காரணமாக ஒரு அரசவிருந்தில் பன்றிபோல் ஊளையிட்டது தனிச்செய்தியாகும்.

Advertisements

One Response to “குருதிநீருக்குள்ளே: கடவுளர், மரபணுக்கள் மற்றும் ஊழ்வினைப்பயன்”

  1. Lisa January 2, 2015 at 8:05 am #

    You post interesting content here. Your website
    deserves much more traffic. It can go viral if you give it initial boost, i know
    very useful tool that can help you, simply type in google: svetsern traffic tips

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: